டார்வின்: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்திற்கு சென்ற பயணியின் உடமைகளை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அந்த பயணியின் பையில் முட்டை மற்றும் இறைச்சி அடங்கிய மெக்மஃபின்கள் மற்றும் ஒரு ஹாம் குரோசண்ட் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை எடுத்து வந்ததற்காக அந்த பயணிக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் Foot and mouth disease (FMD) பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கால்நடைத் தொழில் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். FMD தடுப்பு நடவடிக்கையாகவே இந்தோனேசியாவிலிருந்து இறைச்சி உணவை கொண்டு வந்த பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மெக்மஃபின்களின் விலை ரூ. 600 மட்டுமே.
இதையும் படிங்க:பிரேசில் நாட்டில் முதல் குரங்கம்மை உயிரிழப்பு!