லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா): ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை மீண்டும் தனது ஸ்டாண்ட் அப் காமெடி நகைச்சுவை நிகழ்ச்சியில் கிரிஸ் ராக் வம்பிழுத்துள்ளார். சமீபத்தில் நடந்த தனது நிகழ்ச்சியில், “வில் ஸ்மித் கடந்த 30 ஆண்டுகளாக தன்னை ஒரு ‘பெர்ஃபெக்ட்’ மனிதராக காண்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் மூலம் அவரும் நம்மைப்போல ஒரு அசிங்கமான ஆள் தான் என்பது தெரியவந்துவிட்டது” என்று மீண்டும் வம்பிழுத்துள்ளார்.
தனது ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சியில் தன் உடன் காமெடியனான டேவ் சாப்பல், ”அந்த அறை வலித்ததா..?” எனக் கேட்ட கேள்விக்கு, “ஆமாம். ஒரு நகைச்சுவை சொன்னதற்காக என்னை அவர் அப்படி தாக்கிவிட்டார். ஒரு வழியாக இதன் மூலம் அவர் 30 ஆண்டுகளாக அணிந்திருந்த முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டார். இனி, எப்போதும் அந்த முகமூடியை அவர் மாட்டி விடக்கூடாது என நம்புகிறேன்” என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆஸ்கார் அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் கிரிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியான ஜடா ஸ்மித்தின் தலை முடி குறித்து நக்கல் அடிக்க, உடனே மேடை ஏறிய வில் ஸ்மித், கிரிஸ் ராக்கை அறைந்தது உலகெங்கும் பெரும் பேசுபொருளானது. பல ஊடகங்களில் விவாதங்களுக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச