ETV Bharat / international

சீனாவின் 3ஆவது விமானம் தாங்கி கப்பல் அறிமுகம் - ப்யூஜியன் போர்க்கப்பல்

உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்ட சீனாவின் 3ஆவது விமானம் தாங்கி கப்பல் "ப்யூஜியன்" அந்நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டது.

china-launches-most-advanced-first-fully-domestically-built-3rd-aircraft-carrier

author img

By

Published : Jun 17, 2022, 3:20 PM IST

பெய்ஜிங்: உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்ட சீனாவின் 3ஆவது விமானம் தாங்கி கப்பல் "ப்யூஜியன்" இன்று (ஜூன் 17) நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டது. இந்திய-பசிபிக் பெருங்கடலில் தனது கடற்படையை விரிவுபடுத்த இந்த கப்பலை சீனா உருவாக்கியது. இந்த கப்பலின் பாகங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டவை.

ஷாங்காய் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுவந்த இந்த கப்பல் ஏப்ரல் 23ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், கரோனா காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமானதால் இன்று அர்பணிக்கப்பட்டது. 80 ஆயிரம் டன் எடையை தாங்கக்கூடியது. 80க்கும் மேற்பட்ட போர் விமானங்களுக்கான இடவசதி கொண்டது.

சீனாவின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான "லியோனிங்" சோவியத் காலக் கப்பலின் மறுசீரமைப்பாகும். இந்த கப்பல் 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து உள்நாட்டிலேயே போர்க்கப்பலை உருவாக்க திட்டமிட்டு 2019ஆம் ஆண்டு "ஷான்டாங்" என்ற விமானம் தாங்கி கப்பலை சீனா கட்டிமுடித்தது. அதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 17) மூன்றாவது போர்க்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் 5 நாள்களுக்கு மட்டுமே பெட்ரோல் இருப்பு உள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.