மனிடோபா (கனடா): கனடாவின் மனிடோபா மாகாணத்தின் கிராமப்புற பகுதியில் நேற்று (ஜூன் 15) பேருந்து மற்றும் கனரக லாரி (semi-trailer truck) மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளதாகவும் கனடா காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம், இந்தப் பேருந்தில் பெரும்பாலும் வயது மூத்தவர்கள் பயணித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பாக மனிடோபா ராயல் கனடா மவுண்டட் காவல் துறையின் கட்டளை அதிகாரி ராப் ஹில் கூறுகையில், “விபத்துக்கு உள்ளான பேருந்தில் 25 பேர் வரை பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
விபத்து நடந்த தகவல் கிடைத்த உடன், மனிடோபா மாகாணத்தில் இருந்து அனைத்து மீட்பு ஆதாரங்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் சிக்கி காயம் அடைந்த 10 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கனரக லாரியின் என்ஜின் சேதம் அடைந்து சாலையில் கிடக்கிறது. அதேபோல், விபத்துக்கு உள்ளான பேருந்து கனரக லாரியின் அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் புகை வெளிவந்தபடி காணப்படுகிறது. மேலும், பேருந்து மற்றும் கனரக லாரியின் உடைந்த கண்ணாடித் துண்டுகள், பெரிய அளவிலான பம்பர் ஆகியவையும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
இதனிடையே, வின்னிபெக் மற்றும் ரெஜினா ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளன. மேலும், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மனிடோபாவில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
The news from Carberry, Manitoba is incredibly tragic. I’m sending my deepest condolences to those who lost loved ones today, and I’m keeping the injured in my thoughts. I cannot imagine the pain those affected are feeling – but Canadians are here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The news from Carberry, Manitoba is incredibly tragic. I’m sending my deepest condolences to those who lost loved ones today, and I’m keeping the injured in my thoughts. I cannot imagine the pain those affected are feeling – but Canadians are here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) June 15, 2023The news from Carberry, Manitoba is incredibly tragic. I’m sending my deepest condolences to those who lost loved ones today, and I’m keeping the injured in my thoughts. I cannot imagine the pain those affected are feeling – but Canadians are here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) June 15, 2023
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற வலியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. கனடா மக்கள் எப்போதும் உங்கள் உடனே இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
கார்பெரி என்ற இடமானது மனிடோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக் பகுதியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு சஸ்காட்ச்வன் மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், ஹம்போல்ட் புரோன்காஸ் மைனர் லீக் ஹாக்கி குழுவினர் 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Australia bus accident: ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு!