லண்டன்: இரண்டாம் உலகப்போரின் தாக்கத்திலிருந்து உலகம் மீளாத காலத்தில் ராணியாக பதவியேற்ற எலிசபெத், பிரிட்டன் சாம்ராஜ்யம் காமன் வெல்த் கூட்டமைப்பாக மாறியதற்கும் சாட்சியாக வாழ்ந்துள்ளார். பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் பங்கேற்றது, விலகியது என்று பல அரசியல் நிகழ்வுகளை கண்டுள்ளார். தனது பதவிக்காலத்தில் சர்ச்சில் முதல் லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களைக் கண்டுள்ளார்.
எலிசபெத்தின் பதவிக்காலத்தில் 1951ஆம் ஆண்டில் பதவியேற்ற முதல் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் 1874ஆம் ஆண்டில் பிறந்தவர். இதிலிருந்து நூறாண்டுகளுக்கு பின்னர் அதாவது 1975ஆம் ஆண்டில் பிறந்த லிஸ் டிரஸ்-ஐ செப்டம்பர் 6ஆம் தேதி எலிசபெத் பிரதமராக நியமித்தார். தனது பதவிக்காலம் முழுவதும் பிரதமர்களுடன் வாராந்திர கலந்துரையாடல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் இரண்டாம் எலிசபெத். அந்த பிரதமர்களின் பெயர் மற்றும் ஆட்சி காலம் பின்வருமாறு.
- வின்ஸ்டன் சர்ச்சில், 1951-1955
- ஆண்டனி ஈடன், 1955-1957. 1956
- ஹரோல்ட் மேக்மில்லன், 1957-1963
- அலெக் டக்ளஸ்-ஹோம், 1963-1964
- ஹரோல்ட் வில்சன், 1964-1970 மற்றும் 1974-76
- எட்வர்ட் ஹீத், 1970-1974
- ஜேம்ஸ் காலகன், 1976-1979.
- மார்கரெட் தாட்சர், 1979-1990
- ஜான் மேஜர், 1990-1997
- டோனி பிளேர், 1997-2007
- கோர்டன் பிரவுன், 2007-2010
- டேவிட் கேமரூன், 2010-2016
- தெரசா மே, 2016-2019
- போரிஸ் ஜான்சன், 2019 -2022
- லிஸ் டிரஸ், செப்டம்பர் 2022 முதல் தற்போது வரை.
இதையும் படிங்க: இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், திறமைகளையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன் - பியூஷ் கோயல்