ஃப்நாம் பெந்: ஆசியான் அமைச்சர்கள் கூட்டம் கம்போடியாவின் ஃப்நாம் பெந் நகரில் இன்று (ஆக 4) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றே (ஆக 3) கம்போடியா சென்றார். இந்த கூட்டத்தில் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உரையாடினர்.
இந்த உரையாடலுக்கு பிறகு பிளிங்கன் தரப்பில், "இந்தோ-பசிபிக் நாடுகள் ஒத்துழைப்பு, ரஷ்யா போர், இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் பங்கேற்று எனது நீண்டகால நண்பரான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட நட்பு நாடுகளின் அமைச்சர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக வாஷிங்டனுடன் நெருக்கமான நகரங்களில் டெல்லியும் இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உலகளாவிய நிலைமை குறித்து விவாதிப்பதில் இந்தியா-அமெரிக்கா இடையே எப்போதும் நட்புறவு உள்ளது. ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது இலங்கை, மியான்மரின் நிலைமை குறித்து கேட்டறிந்தேன்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டார் - அமெரிக்க அதிபர் அறிவிப்பு