ETV Bharat / international

அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பயணம்?

இஸ்ரேல் - பாலஸ்தினம் இடையே நீடித்து வரும் போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharatஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்
Etv Bharatஇஸ்ரேலுக்கு உறுதுணையாக நாங்க இருக்கிறோம்.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 2:33 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே 9 வது நாளாக போர் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக உள்ளது என்பதை உறுதிபடுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கிடையே நடைபெறும் போரில் இதுவரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் தரப்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள், ஜெட் விமானங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்நிலையில், அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, குறைந்தது 30 அமெரிக்க குடிமக்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதற்குப் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதக் குழுவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்து அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பருவமழையால் பேரிழப்பு! வேர்க்கடலை அறுவடையில் போதிய மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனை!

மேலும், ”இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை மிகவும் கொடுமையான தீயச் செயல் என விமர்சித்து, பயங்கரவாதத்தை எந்த வகையில் நியாயப்படுத்த முடியாது. இது ஒரு பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாக அமையும். மக்களை கேடயமாக பயன்படுத்தும் ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

இதனையடுத்து, பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒருபோதும் ஆக்கிரமிக்கக்கூடாது. இஸ்ரேல் 2005 இல் காஸாவை விட்டு வெளியேறியது. அதற்கு, அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. பாலஸ்தீனத்துக்கு அதிகாரம் என்பது தேவை. எனவே, காசாவை ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ளதால் பேரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல், போர் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை பற்றிய விமர்சனங்களை பிளின்கன் கேட்டுள்ளார். இஸ்ரேலின் காசா நடவடிக்கையானது தற்காப்பு உரிமையை மீறி, கூட்டுத் தண்டனையாக மாறியுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் சிலம்பம் போட்டி: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.