வாஷிங்டன்: அமெரிக்காவின் 130 முக்கிய பதவிகளில் இந்தியா வம்சாவளியினரை, அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டும் இருக்கும் சமூகத்தினரின் சிறந்த பிரதிநிதித்துவம் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தினத்தின் அமுதப்பெரு விழாவைக் கொண்டாடும் நிகழ்வில், தற்போது வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்புக்கான மூத்த இயக்குநராக பணியாற்றி வரும் ராஜ் பஞ்சாபி கூறுகையில், ‘அமெரிக்க அரசில் இந்திய வம்சாவளியினர் 130 பேரை அமெரிக்க அதிபர் பைடன் தனது நிர்வாகத்தில் நியமித்துள்ளார்.
மேலும் நேற்று(செப்-14) நடந்த கொண்டாட்டத்திற்கான தீம் ஸ்ட்ராங்கர் டுகெதர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ் பஞ்சாபி, ‘அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவின் பன்முகத்தன்மைக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என கூறினார்.
அமெரிக்காவின் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின நிகழ்ச்சியில் சுமார் நான்கு மில்லியன் இந்திய அமெரிக்கர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடியபோது, அமெரிக்கா தனது ஜனநாயக பயணத்தை மதிக்க இந்திய மக்களுடன் இணைந்து, மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையின் வழியில் செல்கிறது எனக் கூறினார். இந்தியாவும் அமெரிக்காவும் இன்றியமையாத நட்பு நாடுகள் எனவும் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய, ‘ பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் குறித்த ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் அஜய் ஜெயின் பூடோரியா கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்க உறவு வலுபெற்று வருகிறது." இந்தியாஸ்போரா தயாரித்த பட்டியலின்படி, 40க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் முக்கிய பதவியில் உள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். நான்கு பேர் பிரதிநிதிகள் சபையில் உள்ளனர். டாக்டர் அமி பெரா, ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிரமிளா ஜெயபால். கூகுள், மைக்ரோமேக்ஸ் ஆகிய உலகளாவிய நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியினர் தலைமை தாங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் காயமின்றி தப்பினார்