சில ஆண்டுகளுக்கு முன்னர் அல் கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா படையினர் பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். "அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பைடன் கூறியுள்ளார்.
எவ்வளவு காலம் சென்றாலும், எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.