ETV Bharat / international

IIT Madras campus: தான்சானியாவில் சென்னை ஐஐடி கிளை - கையெழுத்தானது ஒப்பந்தம்! - சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி

தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடியின் கிளையைத் தொடங்குவது தொடர்பாக இந்தியா - தான்சானியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Jaishankar
தான்சானியா
author img

By

Published : Jul 6, 2023, 1:00 PM IST

தான்சானியா: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக தான்சானியா நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று(ஜூலை 5) சான்சிபார் சென்றடைந்த ஜெய்சங்கருக்கு, தான்சானியா அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவினியை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா உடனான நல்லுறவை மேம்படுத்துவதில் சான்சிபாரின் பங்களிப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார். மேலும், பாதுகாப்பு, கல்வி உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, சான்சிபாரில் சென்னை ஐஐடியின் கிளையைத் தொடங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவினி மற்றும் சான்சிபார் அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சான்சிபார் சென்னை ஐஐடி வளாகம், இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஐடி வளாகம் 50 இளங்கலை இடங்கள் மற்றும் 20 முதுகலை இடங்களுடன், வரும் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தான்சானியாவில் உள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான திரிசூலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

முன்னதாக, கடந்த ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில், இந்தியா- தான்சானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 2வது கூட்டம், அருஷாவில் நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியப் பாதுகாப்புத் துறையின் ராணுவ உபகரண உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தியக் குழுவினர் எடுத்துரைத்தனர். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான 5 ஆண்டுகள் கால செயல்திட்டத்திற்கு இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த செயல்திட்டத்தில், இருதரப்பு ராணுவப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சான்சிபாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலும், மலேசியாவின் கோலாலம்பூரிலும் ஐஐடி கிளை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "உணவு, எரிபொருள், உர நெருக்கடியை சமாளிக்க உதவி" - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.