லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா): பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவர் தன்னை கடந்த 1991-ல் நடந்த டோரண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 17 ஆண்டுகளுக்கு பிறகு அதே விழாவில் மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (அக்.31) லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்சிஸில் தனக்கு ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவர் 1991-ல் நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் அறிமுகமானதாகவும், சில மணிநேரமாக நடந்த திரைப்பட விழாவைத் தொடர்ந்து புத்தகங்கள், சினிமாக்கள் குறித்து பேசிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். திடீரென தன்னை பகிரங்கமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். அதோடு, 17 ஆண்டுகளுக்குப் பின் நியூயார்க் நகரில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தபோது மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் தந்ததாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது, 80-க்கும் மேலான நடிகைகள், மாடல் அழகிகள் என பலரும் புகார் அளித்திருந்தனர். அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே சிறையிலுள்ள ஹார்வி வெயின்ஸ்டீன் 37 பெண்களுக்கு ரூ.123 கோடியை இழப்பீட்டு தொகையாக வழங்கவும் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது புகார் தெரிவித்த சம்பவம் அமெரிக்க திரைப்படத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சத் பூஜை' கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்..