ETV Bharat / international

பாகிஸ்தான் ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு - 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! - Pakistan

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

security forces in Pakistans
security forces in Pakistans
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 3:27 PM IST

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் 8 பயங்கரவாதிகள் சூட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் நாட்டின் ஊடக பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது. மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைபர் பக்துன்க்வா பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கேபியின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படைகளின் வாகனத்தில் வெடி பொருள் வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்க்கு பதிலடி தரும் விதமாக மொத்தம் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ISPR கூறியது. அன்மைகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற அமைப்பை பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது. அதற்கு பின் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக அறியப்படுகின்றன.

இது குறித்து பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஃபார் கான்ஃபிக்ட் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் என்ற குழு செப்டம்பர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 9 ஆண்டுகளில் இல்லதா பயங்கரவாத தாக்குதல் ஆகஸ்ட் மாதத்தில் அரங்கேறி உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் கடந்த 8 மாதத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் 389 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மறைவுக்கு பிறகு 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்.. தேனி நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.