ஹாஃப் மூன் பே: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் சர்வசாதரணமாகவிட்டது. போதைப்பொருள் கடத்தல் கும்லுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதோபோல உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான மோதல் போக்குகளும் அதிகரித்துவிட்டன. இந்த மோதல்களின்போது பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கலிபோர்னியாவின் மான்டேரி பூங்காவில் 2 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. அதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவிருந்த நிலையில், இன்று (ஜனவரி 24) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட 2 வெவ்வோறு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
சான் பிரான்சிஸ்கோவின் ஹாஃப் மூன் பேவில் உள்ள காளான் பண்ணையில் 4 பேரும், டிரக் தொழிற்சாலையில் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதோடு உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஹாஃப் மூன் பே போலீசார் தரப்பில், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். சந்தேகத்திற்கிடமான பலரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம். இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: QYNDR Vaccine: வாய்வழி கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் தீவிரம்