ETV Bharat / international

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு.. குழந்தை உள்பட 6 பேர் படுகொலை.. - கலிபோர்னியாவில் 6 பேர் படுகொலை

கலிபோர்னியாவில் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு
கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு
author img

By

Published : Jan 17, 2023, 10:51 AM IST

அமெரிக்கா: கலிபோர்னியாவின் துலாரே நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று (ஜனவரி 17) அதிகாலை 3.30 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், 6 மாத குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஷெரிப் மைக் பவுட்ரியாக்ஸ் என்பவர் செய்தியாளரிடம் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீட்டில் அதிகப்படியான குண்டுகளை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அவற்றின் எண்ணிக்கையை பார்க்கும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பல நிமிடங்கள் விடாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். 2 பேர் தெருவிலும், ஒருவர் வீட்டின் நுழைவாயிலிலும் சுடப்பட்ட உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டுற்குள் 3 பேர் கண்டெடுக்கப்பட்டனர்.

அதில், ஒருவர் உயிருக்கு பேராடிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதில் ஈடுபட்ட 2 அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பின்னால் ஏதோ பெரிய சதி இருப்பதாக நம்பப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: வெடிப்பொருளுடன் விரட்டிய கும்பல்.. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த இளைஞர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.