சான் பிரான்சிஸ்கோ: வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் பல்வேறு தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதிலுள்ள ராட் தீவுகளில் நேற்றிரவு (ஜூன் 4) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 105.0 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாகவும், பாதிப்புகள் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராட் தீவுகள் மக்கள் அதிகம் வசிக்காத தீவுக்கூட்டங்களின் ஒன்றாகும். இதற்கு தென்கிழக்கே ஆண்ட்ரியானோஃப் தீவுகளும், மேற்கே அம்சிட்கா, கிஸ்கா, செமிசோபோச்னோய் தீவுகளும் உள்ளன. அலாஸ்காவின் கடல்சார் உயிரினங்களில் புகலிடமாக இந்தத் தீவுகள் உள்ளன.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் கோர விபத்து... 40 பேர் உயிரிழப்பு... 450 பேருக்கு காயம்...