ETV Bharat / international

டிவிட்டர் பயனர்கள் டேட்டா திருட்டு? - என்ன சொல்லப்போகிறார் எலான் மஸ்க் - எலான் மஸ்க்

சுமார் 54 லட்சம் டிவிட்டர் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், கூடுதலாக 14 லட்சம் டிவிட்டர் பயனாளர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

twitter
twitter
author img

By

Published : Nov 28, 2022, 3:51 PM IST

டெல்லி: டிவிட்டரை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். இந்த நிலையில், லட்சக்கணக்கான டிவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 54 லட்சம் டிவிட்டர்(Twitter) பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியதாகவும், அதனை விற்பனைக்கு வைத்துள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த மேலும் 14 லட்சம் டிவிட்டர் பயனாளர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்டர்னல் பக் மற்றும் டிவிட்டர் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API)-ஐ பயன்படுத்தி தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த தரவுகள் சில தனிப்பட்ட நபர்களுக்கு பகிரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பயனர்களின் புரொஃபைல் பெயர் உள்ளிட்ட பொதுத் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, லாகின் ஐடி-பாஸ்வேர்டு உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளும் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஹேக்கிங் கடந்த 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜனவரி மாதத்தில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை டிவிட்டர் நிறுவனம் எதுவும் கூறவில்லை.

இதையும் படிங்க: ப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் ரத்து - ஆள்மாறாட்டங்களை தடுக்க எலான் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.