ETV Bharat / international

ஜாம்பி வைரஸ் பேரழிவை தரும்... 48,500 ஆண்டுகள் பழமையான பாண்டோரா வைரஸ் உயிர்பிப்பு... ரஷ்யாவில் கிளம்பிய சர்ச்சை...

ஐரோப்பாவில் 48,500 ஆண்டுகளாக புதைந்துகிடந்த ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Nov 30, 2022, 5:50 PM IST

Updated : Nov 30, 2022, 6:15 PM IST

ரஷ்யாவில் கிளம்பிய சர்ச்சை.
ரஷ்யாவில் கிளம்பிய சர்ச்சை

மாஸ்கோ: ரஷ்யாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பனியில் புதைந்து கிடந்த பண்டோரா யெடோமா என்னும் ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாவரங்கள், விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருப்பதாகவும் இதனால் உலகளாவிய பேரழிவுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நியூயார்க் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளிதழில், ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள யுகேச்சி அலஸ் ஏரியில் ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்த முதல்கட்ட ஆராய்ச்சியில் பிரெஞ்சு விஞ்ஞானிகள், இது பாண்டோரா யெடோமா வைரஸ் என்பதையும் 48,500 ஆண்டுகள் பழமையானது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாவரங்கள், விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருக்கிறது. சைபீரியாவில் 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 30,000 ஆண்டுகள் பழமையான வைரஸை விட பாண்டோரா வைரஸ் விகாரமானது. அறியப்படாத பண்டைய வைரஸ்களின் மறுமலர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் கணிக்க முடியாதவை. இயற்கையாகவே உறைபனியின் மகத்தான கட்டிப்பாட்டில் வைக்கப்படிருக்கும் வைரஸ்கள் 10 லட்சம் ஆண்டுகள் வரை உறைந்திருக்கும். இதனை மனித முயற்சிகள் வெளிக்கொண்டுவருவது என்பது உலகளாவிய பேரழிவை தூண்டிவிடும் செயலாகும். இதற்கு பிரெஞ்சு விஞ்ஞானிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வைரஸ் ஆராய்ச்சிகள் நடத்தப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பூமியின் வெப்பநிலை, காலநிலை போன்று இப்போது இருக்கவில்லை. பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பில்லாத நவீன காலத்தில் பண்டை வைரஸ்களின் ஆராய்ச்சி அபாயகரமானது. அதேபோல, வைரஸ்கள் காலநிலைக்கு ஏற்ப உருமாற்றம் அடைக்கூடியவை. கரோனா தொற்று எளிதாக கட்டுப்படுத்தப்படவில்லை. கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான், டெல்டா என்று வந்துகொண்டிருந்தது. ஆகவே, விஞ்ஞானிகள் பேராபத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 6.8 லட்சம் மக்களை கொன்ற 5 வகையான பாக்டீரியாக்கள்

Last Updated : Nov 30, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.