ஹெல்மண்ட்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் வீதியில் கிடந்த வெடிகுண்டை, பள்ளிக் குழந்தைகள் சிலர் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அதை வைத்து விளையாடியபோது குண்டு திடீரென வெடித்துள்ளது. இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும் 2 குழந்தைகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கின்றன. இதில் வெடிக்காத குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வீதிகளிலும், பொது இடங்களிலும் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்போது குழந்தைகளிடம் சிக்கி, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆப்கன் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 18 பேர் உயிரிழப்பு, 21 பேர் படுகாயம்