ETV Bharat / international

புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீர் மூன்றாவது முறையாக வெற்றிகரமாக வெளியேற்றம்! - பிரதமர் ஜி ஜின்பிங்

ஜப்பானில் புக்‌ஷிமா அணு உலையில் ட்ரிடியம் கலந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பசிபிக் பெருங்கடலில் முதல் இரண்டு கட்டங்களாக வெளியேற்றியதையடுத்து தற்போது மூன்றாவது முறையாகவும் வெளியேற்றப்பட்டது.

ஜப்பானில் கதிர்வீச்சு நீர் மூன்றாவது முறையாக வெளியேற்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 7:04 PM IST

டோக்கியோ: சுனாமி பேரலையால் துவம்சம் செய்யபட்ட புகுஷிமா அணு உலையில் இருந்து முதல் இரண்டு கட்டங்களைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக ட்ரிடியம் கலக்கப்பட்டு, பலமுறை சுத்திகரிக்கப்பட்டத் தண்ணீரை பசிபிக் பெருங்கடலில் கலந்தது ஜப்பான். ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதன் தொடர்சியாக சுனாமி பேரலையால் மொத்த நாடும் ஸ்தம்பித்து போனது.

இந்தப் பெரும் இயற்கை விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சுனாமியின் போது அதிகப்படியான சேதத்தை சந்தித்தது ஜப்பானில் அமைந்திருந்த புகுஷிமா பகுதியில் அமைந்திருந்த டாய்ச்சி அணு உலை.

சுனாமி தாக்குதலின் போது அணுமின் அலைக்குள் அதிகளவில் தண்ணீர் புகுந்ததால், ஜெனரேட்டர்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் என அனைத்தும் செயலிழந்து வெப்பம் அதிகரித்த நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் சுற்றுச்சூழலில் அதிகரித்தது. இதை தடுக்கும் வகையில், வெப்பத்தை குறைக்க லட்சக்கணக்கான லிட்டர் டன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.

சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் கதீர் வீச்சுடன் இணைந்து, அணு உலையிலுள்ள ராட்சத தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்புப் பணியை செய்து வந்த டெப்கோ நிறுவனம் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு தண்ணீர்களை தேக்கி வைக்கும் தொட்டிகள் நிறைந்ததையடுத்து அவற்றை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்ற திட்டமிட்டது. இதனை ஏற்று அந்நாட்டு அரசு பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்காக ஐநா-விடம் அனுமதி பெற்றிருந்தாலும், உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து பசிப்பிக் பெருங்கடலை பகிரும் நாடுகளான சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் வரை எதிர்ப்புகள் வலுத்தன.

இந்த எதிர்ப்புகளை மீறி ஐநா-வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பின் கீழ், பல விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளுடன் கதிர்வீச்சு கலக்கப்பட்ட தண்ணீர், பலமுறை சுத்திரகரிக்கப்பட்டு பின்னர் பல்வேறு கட்டங்களாக பசிபிக் பெருங்கடலில் கலக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார். இதையடுத்து கதீர்வீச்சு கலந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டது. கடலில் கலக்கப்பட்டப் பின்னர் கடலின் தன்மை மற்றும் அங்குள்ள உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நிறவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத்தையும் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது ஜப்பான்.

முன்னதாக சீன போன்ற எல்லை பகிரும் நாடுகள் ஜப்பானின் ஏற்றுமதி கடல் உணவுகளுக்கு தடை விதித்தது. இதனால் கடல் வாழ் உயிரனங்களின் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது ஜப்பான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 17ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் சீனா நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இது குறித்து இரு நாடுகளின் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதனால், நிவாரண உதவி, அந்நாட்டு மீன்களின் நுகர்வோரை அதிகரிக்க பல்வேறு பிரச்சாரங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்நாட்டு அரசுடன் டோக்கியோ மின்சார நிறுவனம் tokyo electric power company- TEPCO வாழ்வாதாரம் இழந்த மீனவர்களுக்கு உதவும் வகையில் 580 இழப்பீடு கோருபவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.