பெய்ஜிங்: சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நேற்றிரவு (ஆக.17) திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் டத்தோங் ஹுய் கவுண்டி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இதில் சுமார் ஆயிரத்து 500 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருவதாகவும் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிங்காய் மாகாணத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிழக்கு சூடானில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின