ஈரான் தலைநகர் தெங்ரேனில் கடல் போல திரண்டிருந்த பொதுமக்கள், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கண்ணீருடன் சுலைமானிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
இறுதி ஊர்வலம் நடைபெற்ற தெஹ்ரேன் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை முதலே, பெருந்திரளான மக்கள் ஈரானிய கொடிகளுடனும் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்களைக் கொண்ட பதாகைகளுடனும் கூடத் தொடங்கனர்.
காசிம் சுலைமானியின் இறுதி பிரார்த்தனை அயதுல்லா அலி கமேனி தலைமையில் நடந்தது. இதில் உயர்மட்ட அரசு அலுவலர்களும் ராணுவ அலுவலர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக, சனிக்கிழமை ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: ட்ரம்பின் தலைக்கு இவ்வளவு கோடியா? - விலை நிர்ணயம் செய்த ஈரான்!