ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் ஷூமேக்கர். ஃபார்முலா நம்பர் 1 கார் பந்தய ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இவரின் முகம் நன்கு அறிமுகம். உலக அளவிலான கார் பந்தயங்கள் முதல் உள்ளூர் பந்தயங்கள் வரை, இவரின் பந்தயக் கார் சீறிக்கொண்டு முதலில் செல்லும்.
மற்ற வீரர்கள் மைக்கேல் ஷூமேக்கரை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் அவரை பின்தொடர்ந்து செல்வார்கள். அந்த அளவுக்கு அதிவேகப் பயணத்தில் மைக்கேல் கில்லாடி. இவரின் மின்னல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் துயரம், 2013ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் நடந்தது.
அன்றைய தினம் நடந்த விபத்தில் மைக்கேல் ஷூமேக்கரின் வாழ்க்கை நின்று போனது. ஆனாலும் உயிரைப் பிடித்துக் கொண்டு, இன்று வரை அந்த மாவீரன் சுவாசித்து வருகிறான். அவரது உடல் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : பிரேசிலியன் ஃபார்முலா ஒன் கார்பந்தயம் - ரெட்புல் வீரர் சாம்பியன்