கடந்த செவ்வாய் அன்று இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர்ப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்பு திடீரென அங்கு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டத் தொடங்கியது. அதிவேகமாக வீசிய காற்று அந்தப் பகுதியில் உள்ள மரங்களை வேருடன் சாய்த்தது. கனமழையுடன் ஆலங்கட்டிகளும் விழத் தொடங்கியதன் விளைவாக, நேப்பிள்ஸ் நகரில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளும் வெளியே நிறுத்திவைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகளும் நொறுங்கின.