ETV Bharat / international

'அமெரிக்கர்களை விடுவியுங்கள்' - ஈரானை வலியுறுத்தும் அமெரிக்கா - கொரோனா வைரஸ் தற்போதைய செய்திகள்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

us foreign secretary pompeo
us foreign secretary pompeo
author img

By

Published : Mar 11, 2020, 5:07 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பம் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. குறிப்பாக சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு, ஈரான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை அந்நாடு விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா தற்போது வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பேசுகையில், "கோவிட்-19 ஈரான் சிறைகளில் பரவி வருவதாக வெளியாகும் தகவல் கவலையளிப்பதாகவே உள்ளது. எனவே, ஈரானிய அரசு அந்நாட்டு சிறைகளில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வைரஸ் பரவும் சூழலில் அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது நாகரிகமற்றது. ஈரானில் (கோவிட் காரணமாக) அமெரிக்கர்கள் யாரேனும் உயிரிழந்தால், அதற்கு அந்நாடு தான் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்" என்றார்.

ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாட்டில் இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டு ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள சுமார் எழுபது ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிறைத் துறைத் தலைவர் அல்கார் ஜகாங்கீர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டது என ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் ஈரானை விமர்சித்துள்ளனர்.

இதையும் படிங்க : இத்தாலியைத் துரத்தும் கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.