சிரியாவிலுள்ள கச்சா எண்ணெய் கிணறுகளைப் பாதுகாக்க தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் சிரியாவுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கச்சா எண்ணெய் கிணறுகளைப் பாதுகாக்க குர்து படைகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை வீரர்கள் சிரியா அனுப்பப்படுவார்கள் என்றோ எந்தமாதிரியான படைகள் அனுப்பப்படும் என்றோ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக டிரம்பின் உத்தரவை அடுத்து இம்மாத தொடக்கத்தில் சிரியாவிலிருந்த தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்கப் படைகள் திரும்பியதன் காரணமாக குர்து படைகள் மீது துருக்கி தனது தாக்குதல்களை தொடங்கி பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் தனது படைகளை சிரியா அனுப்ப உள்ளது.
டிரம்பின் எதேச்சையான முடிவுகளால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: துருக்கியில் இருந்து வெளியேறாவிட்டால் தலைகளை நசுக்கிவிடுவோம் - அதிபர் மிரட்டல்