ஈரான் தலைநகரம் தெஹ்ரானிலிருந்து உக்ரேன் தலைநகரம் கிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது.
இதனால் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். அதில் ஈரானைச் சேர்ந்த 82 பேர், கனாடாவைச் சேர்ந்த 63 பேர், உக்ரேனைச் சேர்ந்த 11 பேர், சுவீடனைச் சேர்ந்த 10 பேர், ஆப்கானைச் சேர்ந்த 4 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த பிளாக் பாக்ஸை (Black box) தெஹ்ரான் விமான நிறுவனம் உக்ரேன் நாட்டிற்கு தரமறுத்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் போயிங் விமானம் 737 மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 346 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!