ஐக்கிய அரபு அமீரகத்தில் துருக்கி நாட்டை சேர்ந்த அலி ஒஸ்டூர்க் மெமெட் (49) சிரியாவின் இரண்டு பயங்கரவாத அமைப்பான அல்- நுஸ்ரா, அஹரார் அல்- ஷாம் ஆகியவற்றின் கொள்கையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
மேலும், இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதியை வங்கி கணக்கு மூலம் அனுப்பியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், அந்த நபருக்கு ஆயுள் தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, அவரது தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நபரின் ஆயுள் தண்டணையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டத்தின்படி 25 ஆண்டுகாலம் ஆயுள் தண்டணையை அந்த நபர் அனுபவிக்க வேண்டும். இந்த தண்டணை காலம் முடிந்த பின்பு, சொந்த நாட்டு அவர் திருப்பி அனுப்பப்படுவார்.