ETV Bharat / international

அபுதாபி ட்ரோன் தாக்குதல் - இரண்டு இந்தியர்கள் பலி - ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி தாக்குதல்

அபுதாபியில் இன்று(ஜன.17) நிகழ்ந்த ட்ரோன் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Houthis strike Abu Dhabi airport
அபுதாபி ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல்
author img

By

Published : Jan 17, 2022, 8:01 PM IST

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலானது, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கிடங்குகளுக்கு (Abu Dhabi National Oil Company) அருகிலும், விமான நிலைய விரிவாக்கப்பணி நடக்கும் இடத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும், இந்த அபுதாபி ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அபுதாபு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதல்

இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அபுதாபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலை வீரர் உருவங்களுக்கு அனுமதி மறுப்பு - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.