இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்தாண்டு சவுதி அரேபிய அரசு வெறும் ஆயிரம் வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதியளித்தது.
நடப்பாண்டும் அனுமதி இல்லை
நடப்பாண்டும் கோவிட்-19 இரண்டாம் அலை பல நாடுகளை திக்குமுக்காட செய்த நிலையில், ஹஜ் பயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற ஐயம் எழுந்திருந்தது.
இந்தநிலையில், ஹஜ் பயணம் குறித்த அறிவிப்பை சவுதி நாட்டின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு அதிகபட்சமாக 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் உள்நாட்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடல்நலனை கருத்தில் கொண்டே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முடிவுக்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் துணை நிற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஸ்க் இல்லாமல் வாகனப் பேரணியில் பங்கேற்ற பிரேசில் அதிபருக்கு அபராதம்!