ETV Bharat / international

'கஷோகியின் கொலை என் கண்காணிப்பில்தான் நடந்தது!' - சவுதி இளவரசர் ஒப்புதல் வாக்குமூலம்! - Khashoggi murder Mohammed Bin salmaan

ரியாத்: சவுதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கஷோகியின் படுகொலை தன் கண்காணிப்பில்தான் நடந்ததாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Mohammed bin Salman
author img

By

Published : Sep 27, 2019, 9:55 AM IST

Updated : Sep 27, 2019, 10:15 AM IST

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் கட்டுரையாளராகப் பணியாற்றிவந்தார். சவுதி அரேபிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் கட்டுரைகள் எழுதிவந்ததால், அந்நாட்டு அரசு கடும்கோபத்தில் இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தார் கஷோகி.

பத்திரிகையாளர் கஷோகி துருக்கியைச் சேர்ந்த ஹதிசே சேங்கஸ் என்ற பெண்ணை காதலித்துவந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த கஷோகி, திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்றார். உள்ளே சென்றவர் மாயமாகவே, அம்மர்மம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகத் தொடங்கின.

இந்நிலையில், கஷோகி தூதரகத்திற்குள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு அறிவித்தது. மேலும் இந்தக் கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டியது. அதற்கான ஆவணங்களைத் திரட்டி விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இச்சம்பவம் உலக அரங்கையே அதிரவைத்த நிலையில், கஷோகி கொலை சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என சவுதி அரேபிய அரசு மறுத்துவந்தது.

இந்நிலையில், கொலை குறித்து தனியார் செய்தி நிறுவன பத்திரிகையாளர் மார்டின் ஸ்மித் என்பவர் சவுதி இளவசர் முகமது பின் சல்மானை பேட்டி கண்டார். அதில் சல்மான், தனது நேரடி கண்காணிப்பில்தான் கொலை அரங்கேறியதாக அதிர்ச்சிக்குரிய விதத்தில் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கஷோகி கொலை நடைபெற்று ஓராண்டு நிறைவுபெறவுள்ள நிலையில் சல்மானின் வாக்குமூலம் உலகை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இதையும் படிங்க: கஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு எதிராக நம்பத்தகுந்த ஆதாரங்கள்

Last Updated : Sep 27, 2019, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.