ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது.
ஈரான்-அமெரிக்க மோதல் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் நேற்று ஆலோசனை மேற்கொண்டதாக, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : உக்ரைன் விமானத்தை தாக்கியது நாங்க தான் - ஈரான்