ETV Bharat / international

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் - ரஷ்யா எச்சரிக்கை - ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ரஷ்யா கருத்து

மாஸ்கோ : ஈரான் - ஆறு வல்லரசு நாடுகளுக்கு இடையே 2015ஆம் ஆண்டில் கையெழுத்தான ஈரான் அணுசக்தி ஒப்புந்தம் முறியக்கூடிய அபாயத்தில் உள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Russia foreign Minister
Russia foreign Minister
author img

By

Published : Dec 31, 2019, 10:04 AM IST

உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கப்போகிற ஈரான் நாட்டின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அந்நாட்டுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஆறு வல்லரசு நாடுகள் 2015ஆம் ஆண்டு 'Joint Comprehenscive Plan of Action' (JCPOA) என்றழைக்கப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதனடிப்படையில், ஈரான் அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்தக்கொண்டது.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முரணாக ஈரான் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகியது. மேலும், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யவிடாமல் அந்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கியது.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஈரான் ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் முதல் படிப்படியாக விலக தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், அரசு முறைப்பயணமாக மாஸ்கோ சென்றுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவத் ஸாரிஃபை, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லவ்ரோவ் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சர்ஜி லவ்ரோவ், "அமெரிக்கா எடுத்துள்ள ஆபத்தான நிலைப்பாட்டின் காரணமாக, (ஈரான் அணுசக்தி) ஒப்பந்தம் முறியும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணங்கி செயல்படவேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தம் காணாமல்போய்விடும்" என எச்சரித்தார்.

இதையும் படிங்க : மீண்டு(ம்) வரும் இந்திய ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.