இஸ்ரேல் நாட்டில் பிரதமர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் போட்டியிட்ட மூன்று தலைவர்களும் பெரும்பான்மையை நிரூபிக்காததால் பதவியேற்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதனிடையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்ற அன்று, நாடு முழுவதிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்போது தனியார் உணவு விடுதி ஒன்று வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தாங்கள் பறிமாறும் மில்க் ஷேக்குகளில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரை எதிர்த்துப் போட்டியிடும் பென்னி கண்டஸ், தொழிலாளர் கட்சித் தலைவர் அவி காபே ஆகியோரது முகங்களை பதித்து வழங்கியது. இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது குறித்து அந்த விடுதியின் மேலாளர் கூறுகையில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த மில்க் ஷேக்குகளை அறிமுகம் செய்தோம் என்றார்.
மேலும் வாடிக்கையாளர்கள் மில்க் ஷேக்குகளின் பெயரைக் குறிப்பிடாமல் அதில் இருக்கும் தலைவர்களின் பெயரைச் சொல்லி வாங்கிப் பருகியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.