ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது.
அதன் விளைவாக இதுவரை ஐந்தாயிரத்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்படி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யூனிசெஃப்பின் ஏமன் நாட்டுப் பிரதிநிதியான சாரா நயன்ட் கூறுகையில், 'ஏமன் நாட்டின் குழந்தைகள் இந்த போரால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இருபது லட்சத்திற்கும் அதிமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதில் குறிப்பாக ஐந்து வயதிற்கு கீழ் இருக்கும் மூன்று லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார். சுமார் 24 மில்லியன் எண்ணிக்கை, ஏறக்குறைய அங்குள்ள மக்களில் 80 சதவிகிதம் பேருக்கு உதவியும், பாதுகாப்புமும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
name reference: Sara Beysolow Nyant, Houthi rebels
மேலும் படிக்க: 'மோடி ஹிட்லர்' மனித வெடிகுண்டை கட்டி மிரட்டும் பாக்., சர்ச்சை பாடகி