இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இஸ்லாம், யூதம் மதங்களுக்கு பொதுவான டெம்பில் மவுண்ட் அல்லது அல்-அக்சா என்றழைக்கப்படும் புனிதத் தளம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஈகை திருநாளையொட்டி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய இஸ்லாமியர் இங்கு திரண்டு வழிபாடு செய்தனர். அப்போது, இந்த புனித வளாகத்துக்குள் இஸ்லாமியர்கள் அனுமதிப்படவில்லை எனக்கூறி ஒரு தரப்பினர், இஸ்ரேல் காவல் துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தை கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். பின்னர், இஸ்லாமிய பக்தர்களும், இஸ்ரேல் காவல் துறையினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில், காவல் துறையினர் உட்பட 18 காயமடைந்தனர்.
சமீபத்தில், ஜெருசலேமில் இருந்து தெற்கே உள்ள பகுதியல் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் பலியானதால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், தற்போது மோதல் அரங்கேறியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதலில் இந்த புனிதத் தளம் மையப்புள்ளியாக விளங்குவது கவனிக்கத்தக்கது.