இஸ்ரேல் நாட்டில் நீண்டகாலமாக அதிகாரத்தில் கோலாச்சிவரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடந்த ஒரு வருடகாலமாக நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. அவர் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டு அந்த குற்றச்சாட்டை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
அதன்பின்னர் அங்கு நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகு பெரும்பாண்மை பெறாத நிலையில் அவர் ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக நெதன்யாகு பிரதமராக தொடரும் சூழலில், அங்கு தற்போது கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இதையடுத்து, இந்த சூழலை பயன்படுத்தி நெதன்யாகு தன் மீதான ஊழல் புகாரிலிருந்து விடுபட்டு அதிகாரத்தை வசத்தில் வைக்க திட்டம் தீட்டுவதாக எதிர்கட்சிகள், பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தெருவில் இறங்கி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு போராட்டக்காரர்களை ஒடுக்கிய நிலையில், பிரதமர் இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் போராட்டம் தீவிரமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீன முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி : இந்தியா அதிரடி