சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலக முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸால் உலகளவில் இதுவரை ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பது இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகச் சுகாதார அமைப்பால் "பொருந் தொற்றுநோய்" என அறிவிக்கப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் இன்றும் கண்டுபிடிக்கப்படாததால், அதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறிவருகின்றனர்.
இந்தச் சூழலில், கோவிட்-19 வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஜெருசேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணையை, மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேரில் ஆஜராகவிருந்த சூழலில், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலில் 200 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கூடக்கூடாது என அந்நாட்டு அரசு கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 107 ஆக உயர்வு!