ETV Bharat / international

கரோனா அச்சுறுத்தல்: எல்லையை மூடிய இஸ்ரேல் - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

டெல் அவிவ்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனது அண்டை நாடுகளுடனான எல்லைகளை இஸ்ரேல் மூடியுள்ளது.

Israel shuts its borders to all foreigners amid COVID-19

author img

By

Published : Mar 19, 2020, 1:12 PM IST

உலகம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாளுக்கு நாள் இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே-வருகிறது.

இஸ்ரேலில் இதனால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்த நிலையில், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம், இஸ்ரேல் நாட்டு மக்கள், இஸ்ரேலில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் உள்நுழைய தடைவிதித்துள்ளது.

உலக நாடுகள் பலவும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து தப்ப பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவந்த நிலையில் இஸ்ரேலும் அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடியுள்ளது. மேலும், எகிப்து, ஜோர்டன் நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை மூடவும் ஆலோசித்துவருகிறது.

இந்தப் பெருந்தொற்று முன்னெச்சரிக்கை குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டில் பத்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் இதுவரை கோவிட்-19ஆல் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற அவர், நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய எல்லைகள் நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.