ETV Bharat / international

ஊழல் புகாரில் கட்டம் கட்டப்படும் இஸ்ரேல் பிரதமர் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமை வழக்கறிஞர் அவிசாய் மன்தெல்பிலிட்

பத்தாண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு மீது அந்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டு தீவிரமடைந்துவருகிறது.

Israel
author img

By

Published : Nov 22, 2019, 8:30 AM IST

இஸ்ரேல் நாட்டின் நீண்டகாலமாகப் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்தாண்டு முதல் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இஸ்ரேலில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் நெதன்யாகு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், உறுதியான ஆட்சியமைக்க முடியாமல் பிரதமர் பதவியில் மட்டும் நீடித்து வருகிறார்.

தற்போது நெதன்யாகுக்கு மேலும் ஒரு சோதனையாக அவர் மீதான ஊழல் புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெதன்யாகு மூன்று முறை லஞ்சம் வாங்கியதாகவும், அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞரான அவிசாய் மன்தெல்பிலிட் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

நாட்டின் பிரதமர் மீது அந்நாட்டின் தலைமை வழக்கறிஞரே குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது அந்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் இஸ்ரேலில் நிலவிவருவதால் விரைவில் மீண்டும் ஒரு முறை தேர்தலை அந்நாடு சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2019 ஆம் ஆண்டில் இரு முறை தேர்தல் நடத்தப்பட்டு இஸ்ரேலில் ஸ்திரமான ஆட்சி அமைக்கமுடிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பொருளாதாரம் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடுங்கள்' - அரசுக்கு 200 நிபுணர்கள் கடிதம்!

Intro:Body:

Israel crisis: Nethanyahu Indicted over corruption charges by AG

https://indianexpress.com/article/world/benjamin-netanyahu-israel-corruption-case-indictment-6130888/?564636346

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.