ஈராக் தலைவர் பாக்தாத்தை ஒட்டியுள்ள டியாலா என்ற பிராந்தியத்தில் ஐஎஸ் அமைப்பச் சேர்ந்த நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது என்பதால் ஐஎஸ் அமைப்பு குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐஎஸ் அமைப்பினர் இங்கு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்துவதும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பதும் வழக்கமாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் இப்பகுதியில் உள்ள சந்தையில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். ஜனவரி மாதம் நடத்திய இரட்டை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனடா பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி பெண்