ஈரான் நாட்டின் முக்கியத் தலைவராகத் திகழும் அயதுல்லா சையத் அலி கமேனி, இந்தி மொழியில் தனது அதிகாரப்பூர்வ புதிய ட்விட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
இந்த ட்விட்டர் கணக்கை கமேனி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.
இந்தி மொழியில் தொடங்கிய ட்விட்டர் கணக்கில் தேவநாகரி மொழியில் (இந்தி, சமஸ்கிருதம், மராட்டி, காஷ்மீரி, நேபாளம் ஆகிய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை) தனது சுய விவரங்களைப் பதிவிட்டுள்ள இவர், இதுவரை இரண்டு ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், அவர் இந்தக் கணக்கிலிருந்து எந்த இந்தியத் தலைவரையும் இதுவரை பின்தொடரவில்லை.
கமேனி இதற்கு முன்னதாக, பாரசீகம், அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யா, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கியுள்ளார்.
கமேனி, 1981-89ஆம் ஆண்டுகளில் ஈரானின் அதிபராக பதிவி வகித்துவந்தார். 1989ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் முக்கியத் தலைவராக நீடித்துவருகிறார்.