ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அணு சக்தி ஒப்பந்தம் ரத்தானதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க படை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈரோன் அரசு செயற்கைகோளை விண்ணில் செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தது. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஈரானின் முதல் ராணுவ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இன்று காலை ஈரானில் உள்ள பாலைவனத்திலிருந்து ஈரானின் முதல் ராணுவ செயற்கைகோளான நூர் (Noor) செயற்கைகோள் இரண்டு நிலைகளில் விண்ணில் செலுத்தியுள்ளது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டபாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸூம் ஆப்: வீட்டிலிருந்து வேலை செய்யும் டெக்கிகளுக்கு ரான்சம்வேர் அச்சுறுத்தல்!