சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.
இந்நிலையில், ஈரான் சுகாதாரத்துறை இணை அமைச்சரான இராஜ் ஹரிர்சிக்கு (Iraj Harirchi) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை பீதியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நேற்று இரவு எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதுத்துப் பார்த்ததில் எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த அடுத்த சில வாரங்கள் அரசு தீவிரமாகச் செயல்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதுபோல, ஈரானிய சீர்திருத்தவாதியும், அரசியல்வாதியுமான சதேஜி தனும் கொரோனா வைரஸால் பாதிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "உடல் பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், "அரசியல், பாதுகாப்பு தொடர்பாக குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பரோலில் விடுவியுங்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் நேரத்தை செலவழிக்கட்டும்" எனவும் அவர் நீதித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சி.ஏ.ஏ. இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை: அமெரிக்கா