ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளுடன் அமெரிக்கா நீண்ட காலமாக மோதல் போக்கை கடைபிடித்துவருகிறது. இதன் காரணமாக இரு நாடுகள் மீதும் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துவருகிறது.
அணு ஆயுதம் தொடர்பாக ஈரானையும், கச்சா எண்ணெய் தொடர்பாக வெனிசுலாவையும் தொடர்ச்சியான தடைகளை அமெரிக்கா விதித்தாலும், இரு நாடுகளும் அதை பெரிதும் கண்டுகொள்ளாமல் தங்கள் போக்கிற்கு செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தற்போதைய கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விற்பனை தேக்கம் அடைந்துள்ளன. அதேவேளை வெனிசுலாவிற்கு தற்போது பெரும் கச்சா எண்ணெய் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ள நிலையில், அதை மீறும் விதமாக இரு நாடுகளும் நடந்து கொண்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கப்பல் மீது ஏதேனும் தாக்குதலை அமெரிக்கா நடத்தினால் அதற்கு தக்க பதிலடியை ஈரான் மேற்கொள்ளும் என ஈரான் அதிபர் ரோஹானி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிகளை மீறியதால் மன்னிப்புக்கோரிய ஆஸ்திரிய அதிபர்