பாலைவன தேசமான ஈரானில் புதிய எண்ணெய் வயல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 50 பில்லியன் பீப்பாய் வரை கச்சா எண்ணெய் எடுக்கலாம். கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கிடையேயான வல்லரசு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதன் தொடர்ச்சியாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் (Hassan Rouhani) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலைவன நகரமான யாஸ்டில் (Yazd) இந்த அறிவிப்பை ரூஹானி அறிவித்தார். ஈரான் நாட்டின் தெற்கிலுள்ள குஜெஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இதனை அதிபர், கச்சா எண்ணெய் பொருள்கள் நிறுவனங்களின் தாயகம் எனவும் அதிபர் வர்ணித்தார். மேலும் 53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் புதிதாக சேரும் என்றும் அவர் கூறினார்.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் நான்காவது பெரிய நாடாக ஈரான் உள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மற்ற அரபு நாடுகளான சவுதியும் கத்தாரும் முதல் இரு இடங்களில் உள்ளன.
ஈரானில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய எண்ணெய் கிணறு, ஈரானின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும். அதிபர் ரூஹானி தனது பேச்சின்போது இதனையும் குறிப்பிட்டார். பொறியாளர்கள், தொழிலாளர்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு வேலை வந்துவிட்டது என்றார் மகிழ்ச்சியாக!
இதையும் படிங்க: எண்ணெய் கப்பல் தாக்குதல் : பதிலடி கொடும்போம் என ஈரான் உறுதி