ETV Bharat / international

ரஷ்யா, சீனா, ஈரான் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி! - ரஷ்யா, சீனா, ஈரான் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி.!

டெஹ்ரான்: ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்தியப் பெருங்கடல், ஓமன் கடல் பகுதியில் நான்கு நாள் கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.

Iran, Russia, China begin joint maritime drills

author img

By

Published : Dec 27, 2019, 8:06 PM IST

பிராந்தியங்களில் சர்வதேச வர்த்தகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டது. 'மரைன் செக்யூரிட்டி பெல்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வு வருகிற 30ஆம் தேதியன்று நிறைவடையும்.

இதுதொடர்பாக ஈரானிய ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பாஸ்ல் சேகார்ச்சி கூறும்போது, "இந்த நிகழ்வு பிராந்தியங்களில் சர்வதேச வர்த்தகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. இத்துடன், கடல்சார் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் கூட்டு நடவடிக்கை தொடரப்பட வேண்டும்" என்றார்.

சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான் கூறும்போது, இந்த ராணுவப் பயிற்சி பிராந்தியத்திற்கு முக்கியமானது என்றார்.

இதற்கிடையில், கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க யரோஸ்லாவ் மட்ரி, எல்னியா டேங்கர், விக்டர் கோனெட்ஸ்கி டக்போட் ஆகிய போர்க்கப்பல்களை மாஸ்கோ அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், பயிற்சிகளின்போது கடல்கொள்ளையர்களைத் தடுத்தல், கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பது, தகவல் தொடர்புகளை நிறுவுதல், இடர்ப்பாடுகளில் சிக்கும் கப்பல், மாலுமிக்கு உதவி வழங்குவது போன்றவற்றை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்தாண்டு ஜூலை மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த, அணிவகுப்பில் கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் ரஷ்யா தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 1979ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், பிந்தைய முதல் முக்கிய நிகழ்வாக இந்த கூட்டுப்பயிற்சித் திகழ்கிறது.

இதையும் படிங்க: ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு ரஷ்யா - புடின் பெருமிதம்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.