சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்போது தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஈரானிலும் சிலர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கேபினட் கூட்டத்தில் பேசிய ஹசன் ரூஹானி, ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில், கொரோனா குறித்த தீவிர அச்சத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஈரானில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு விவகாரத்தில், ஈரான் அரசு உண்மையான தகவலை மறைப்பதாக ஈரான் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரானில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் மேலும் 3 பேர் உயிரிழப்பு