கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 - 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி (Hassan Rouhani) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
உக்ரைன் விமானத்தை ஏவுகணை ஒன்று தாக்குவது போன்ற வீடிய சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை பதிவு செய்தவரை ஈரான் அரசு, தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி (Hassan Rouhani) உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளவரசர் ஹாரி முடிவுக்கு ராணி ஒப்புதல்!