டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று, நேற்று முன்தினம் (செப் 15) துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றுள்ளது.
இந்நிலையில், இஸ்தான்புலில் தரையிறங்கிய பயணிகள் தங்களது உடமைகளுக்காக விமானநிலையத்தில் காத்திருந்தானர்.
அப்போது, இண்டிகோ விமான ஊழியர்கள் பயணிகளிடம் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளனர்.
அதில், "ஆப்ரேஷ்னல் கோளாறு காரணமாக உங்ளது உடைமைகளை விமானத்தில் எடுத்துவரவில்லை. இந்த தவறுக்கு மிகவும் விருந்துகிறோம். உங்கள் உடைமைகள் அடுத்த விமானத்தில் ஏற்றிக் கொண்டுவரப்படும். உங்களது பெயர், முகவரியை இண்டிகோ ஊழியர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தில் நிறப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது உடமைகள் விரைவில் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டும் அல்லது விமான நிலையத்துக்கு நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவதிக்குள்ளான பயணிகள் இந்தச் சம்பவம் குறித்து #ShameOnIndiGo என்ற ஹேஷ்டேக்-உடன் ட்விட்டரில் பதிவிட்டு தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.