ஹமாஸ் இயக்கம் கிழக்கு இஸ்ரேல்மீது நடத்திய தாக்குதலில் இந்தியப் பெண் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த இந்தியப் பெண்மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது நிரம்பிய சௌமியா சந்தோஷ் என்பதும் இஸ்ரேலில் வயதான மூதாட்டியை பராமரிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலிருந்தும், காசாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதல்களாலும் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்திருப்பதை அறிந்து வருத்தப்படுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்து, ஹமாஸ் இயக்கம் ஏவிய 137 ராக்கெட்டுகளில் 90 விழுக்காடு ராக்கெட்டுகளை நடுவானில் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசேலமில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு வெளியேற்ற கட்டாயப் படுத்தியது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.